உள்நாடுசூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(13) முதல் ஆரம்பமாகின்றது.

இதன்படி, இன்றைய தினம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கு வாக்களிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

இதற்கமைய இன்று மற்றும் 14, 15, 16, 17 ஆம் திகதிகளிலும் அதேபோன்று 20 மற்றும் 21 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. .

பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமென குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், பொலிஸார், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

இதேவேளை, இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றின் உத்தரவு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இன்று(18) இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor