வகைப்படுத்தப்படாத

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்று

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இன்றைய தினத்திற்கு பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை எற்பதில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான நபர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் அதிகாரியிடம் இன்றைய தினத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த அதிகாரிகளினால் குறித்த விண்ணப்பங்கள் உடனடியாக உறுதிப்படுத்தப்பட்டு தேர்தல் தொகுதி தெரிவத்தாட்சி அலுவலகரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கஞ்சா, மதுபானம் கொடுத்து சிறுமி பலாத்காரம்

ඉන්දීය ක්ෂණික දික්කසාද ක්‍රමය තහනම් කෙරේ

ලංකා තැපැල් සේවා සංගමය වැඩ වර්ජනයකට සුදානම්