உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு – இன்றும் முன்னெடுப்பு

(UTV|கொழும்பு) – பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(21) நிறைவடையவுள்ளது.

கடந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாமல் போனோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த 17 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

எனினும் அந்த காலப்பகுதியில் தபால் வாக்கினை அளிக்க முடியாமல் போனோருக்கு நேற்றும்(20) இன்றும்(21) மேலதிக தினங்களாக வழங்கப்பட்டுள்ளன.

Related posts

கப்ராலுக்கு எதிரான பயணத்தடை மேலும் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம்

இலங்கைக்கான நிதி ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ள 3 சர்வதேச நிறுவனங்கள்