விளையாட்டு

தனுஷ்கவின் நடத்தை பற்றி மஹேல

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக பணியாற்றும் மஹேல ஜயவர்தன, தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நடத்தைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று (07) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், இந்த சம்பவம் இலங்கை அணியின் மனநிலையை பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் திறமை இருந்தும் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

சாமரி அதபத்து தொடக்க பெண்கள் CPL போட்டிக்கு

44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா