உள்நாடு

தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்டம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்புவதற்காக செல்லும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது.

அவ்வாறு பயணிகளை அழைத்து செல்லும் பேருந்து ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதுடன் அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

தினசரி பேருந்துகளுக்கு அவசியமான எரிபொருட்களை முன்னரே பெற்றுக் கொள்வது ஊழியர்களின் பொறுப்பாகும். பேருந்துகளுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பயணிகளுடன் எரிபொருள் நிலையத்திற்கு செல்வதென்பது ஆபத்தான குற்றமாகும் எனவும குறித்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடணம்

“மாணவர்களுக்கு வழமை போன்று உணவு இல்லை என்பது உண்மை..”

யுகதனவி மின்னுற்பத்தி மையம் : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு