உள்நாடு

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் கொடுப்பனவு வழங்க கோரிக்கை

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமையால், தனியார் பேருந்து உரிமையாளர்களும், ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும், இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைக்கின்றது.

ஆனால், தனியார் பேருந்து ஊழியர்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.

இந்நிலையில், ஆசிரியர்கள் கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அந்தக் கொடுப்பனவை தயவுசெய்து பேருந்து ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து துறையை மீட்பதற்கு ஆகக்குறைந்தது 5 இலட்சம் ரூபா இழப்பீடாவது வழங்கப்பட வேண்டும்.

காப்புறுதி முறைமையின் மூலமாகவோ அல்லது அரசாங்கத்தின் மூலமாகவோ இந்த இழப்பீட்டை வழங்குமாறு கெமுனு விஜேரத்ன கோரியுள்ளார்.

Related posts

சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் திலினி பிரியமாலி

இன்று இரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.34

சமன் லால் CID இனால் கைது