உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 577 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 577 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 63,908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று மேல்மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பகுதிகளில் வானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு அமைக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில், 994 வாகனங்களில் பயணித்த 1,796 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றம் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கூட்டப்படும்

மனைவி, காதலி மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சொத்து – நிமால் சிறிபால டி சில்வா மீது முறைப்பாடு

editor

பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை – ரணில்

editor