உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பின்பற்றாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை, பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 9,029 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

ஆணைவிழுந்தான் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

“இந்தியாவில் கைதான ஐ.எஸ் நபர்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்” நாட்டாமை ஒருவர் தொடர்பாம்!

புராதன கட்டடம் : விசாரணை அறிக்கையினை பிரதமரிடம் கையளிப்பதில் தாமதம்