உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 626 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொவிட் -19 தொற்றுபரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59,621 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், மேல் மாகாணத்திற்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் 13 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்று(26) மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் பகுதியில், 307 வாகனங்களில் பயணித்த 515 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், மேல் மாகாணத்துக்கு பிரவேசித்த 302 வாகனங்களில் பயணித்த 580 பேர் சோதனைச்சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கடல் மார்க்கமாக பறவைகள் மற்றும் ஊர்வன கடத்தல்.

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.

சிகை அலங்கரிப்பு நிலையங்களை மீளத் திறக்க அனுமதி