உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 190 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,449 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் சுமார் 41,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எஞ்சிய சுமார் 8,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் நபரொருவருக்கு , 10,000 அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் நீதிமன்றினால் விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் சொத்துக்கள் – தகவல் வழங்கிய விமல் வீரவங்ச | வீடியோ

editor

ஜனாதிபதி தலைமையில் 110 நிறுவனங்களுக்கு விருதுகள்

கணக்காய்வு அதிகாரிகள் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில்