உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 81,220 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81220 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண எல்லைக்குள் உள்நுழைய முயற்சித்த மொத்தம் 781 வாகனங்கள் மற்றும் 1568 நபர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேற முயற்சித்த 1234 நபர்கள் மற்றும் 710 வாகனங்கள் பொலிசாரினால் சோதனைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

வீதிக் கடவையினை கடக்க அனுமதி இல்லாததால் 234 வாகனங்கள் மற்றும் 363 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கொழும்பில் மேலும் 100 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை