கேளிக்கை

தனது வாழ்க்கை படத்தில் நடிப்பாரா சானியா மிர்சா?

(UTV|INDIA)-கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படமாக வந்து பெரிய வரவேற்பு பெற்றதால் விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன.

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது. குத்து சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை கதை பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்து வசூல் குவித்தது.

பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெய்வால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது. இந்த வரிசையில் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கையும் படமாக தயாராகிறது. சானியா மிர்சா 6 வயதில் இருந்தே டென்னிஸ் பயிற்சி பெற்றார்.

இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். சானியா மிர்சா குட்டை பாவாடை அணிந்து விளையாடியது விமர்சனங்களை கிளப்பியது. இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூ‌ஷன் விருதுகள் பெற்றவர். இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கும் 2010–ல் திருமணம் நடந்தது.

சானியாவின் சிறுவயது வாழ்க்கை, டென்னிஸ் விளையாட்டில் நிகழ்த்திய சாதனைகள், திருமணம் உள்ளிட்ட அனைத்தையும் வாழ்க்கை படத்தில் காட்சிபடுத்துகின்றனர். இந்த படத்தின் உரிமைக்காக சானியா மிர்சாவுக்கு இந்தி பட நிறுவனம் பெரிய தொகை கொடுத்து இருக்கிறது.

இந்த படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்க டாப்சியை பரிசீலித்தனர். இப்போது சானியா மிர்சாவையே அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சமூக திரில்லராக ‘புளூவேல்’

வைத்தியராக அமலாபால்…

கார்த்தியுடன் இணையும் ஜோ…