சூடான செய்திகள் 1

தந்தையும் மகனும் சடலமாக கண்டெடுப்பு

(UTV|VAVUNIYA)-வவுனியா – பாவக்குளம், சுதுவென்தபிளவ் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய எஸ். முஸ்தபா என்பவரும் அவருடைய 15 வயது மகனான எம். சயாஸ் என்பவருமே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளத்தின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் மோதியதால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ஜெரோம் பெர்னாண்டோவின் 09 வங்கிகளை சோதனை செய்ய நீதிமன்றாம் அனுமதி!

நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக குடிநீர் பிரச்சினை…

மூன்று பேரை பலிகொண்ட தனியார் பேரூந்தின் சாரதி பொலிசாரினால் கைது