உள்நாடு

தடுப்பூசி தொடர்பில் பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் 16 -18 வயதுக்கு இடைப்பட்ட, மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், பெற்றோர்களின் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றம் இடம்பெறும் நிலையங்கள் தொடர்பான தகவல்களை, சுகாதார வைத்திய அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் ஆகியோரிடம் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

தடுப்பூசி ஏற்றத்திற்கு சீருடை அத்தியாவசியமாக்கப்படவில்லை என்பதுடன், சீருடை உள்ளவர்கள் அதனை அணிந்து செல்ல முடியும்.

இதன்போது அடையாள அட்டை உள்ள மாணவர்கள் அதனை கொண்டுச் செல்ல வேண்டும்.

தங்களது மாணவர்கள் தொடர்பான விபரங்களை அதிபர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – சட்டத்தரணி மனோஜ் கமகே

editor

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக [VIDEO]