வகைப்படுத்தப்படாத

டொனால்ட் ட்ரம்பை சந்தித்த நரேந்திர மோடி

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார்.

இதன்போது வர்த்தகம் மற்றும் தீவிரவாத ஒழிப்பு செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்பட இணங்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பை அடுத்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு, இதற்கு முன்னர் இவ்வளவு உறுதியாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.

அத்துடன் பல்வேறு வழிகளில் இரண்டு நாடுகளும் ஒத்துழைத்து செயற்பட இணங்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Related posts

Anjalika takes on Tania in Under 18 final

5,705 Drunk drivers arrested within 22-days

டெங்குவை ஒழிக்கும் புதிய நுளம்பின் ஊடாக டெங்கு நோயை கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு