வகைப்படுத்தப்படாத

டொனால்ட் டிரம்ப் – நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

(UTVNEWS|COLOMBO) – ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடைபெறுகிறது. ஜி-7 மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லை. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிபட்ட முறையில் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் மோடி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் விவகாரம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றன.

காஷ்மீரின் தற்போதைய நிலைமை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மல்லாகத்தில் கடத்தப்பட்ட மாணவி, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிப்பு

மொரவௌ பிரதேச செயலகத்திற்கு சிறந்த வெசாக்கூடு தயாரிப்பு விருது

Sivalingam fires Sri Lanka to 15th in Netball World Cup