உலகம்

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் பணம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படுகிறார்.

டிரம்ப் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 11 ஆம் திகதியன்று தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

குற்றவியல் பிரேரணையில் ட்ரம்ப் வெற்றி

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு!