உலகம்

டொங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவுக்குட்பட்ட பொலினேசியா துணைக் கண்டத்தில் உள்ள டொங்கா தீவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொங்கா தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் இன்று (30) 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்படும் அபாயகரமான சுனாமி அலைகள் டொங்கா கடற்கரையில் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டருக்குள் (186 மைல்) ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இநத நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

Related posts

ரஷ்யா கைப்பற்றிய நகரை உக்ரைன் இராணுவம் மீட்டது

நெஞ்சு வலி காரணமாக மன்மோகன் சிங் வைத்தியசாலையில்

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது