விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்துவீச்சாளர்

(UTV | இங்கிலாந்து) – டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆன்டர்சன் (James Anderson) பதிவாகியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று சொவ்தம்டனில் (Southampton) இடம்பெற்றது

இந்த இறுதி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வீரர் அசார் அலியை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆன்டர்சன் சாதனை படைத்துள்ளார்

இதேவேளை ஜேம்ஸ் ஆன்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளதோடு, முத்தையா முரளிதரன் தொடர்ந்தும் 800 விக்கெட்டுக்களுடன் முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

குமார் சங்ககார முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா

உலகின் முதல் 20 ஓட்டப்பந்தய வீரர்களில் யூபுன்