விளையாட்டு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர் கொண்டு ஐதராபாத் வெற்றி !

(UTV|INDIA) ஐ .பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில்  ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

நாணய சுழட்ச்சியில் வென்ற ஐதராபாத் அணி தலைவர் புவனேஸ்வர் குமார் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

இந்நிலையில் பிரித்வி ஷா 11 ஓட்டத்துடனும், தவான் 12ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அதையடுத்து களிமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவரும் 43 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் எடுத்தனர். ரிஷப் பந்த், ராகுல் திவேதி, காலின் ஐங்கிராம் ஆகியோர் தலா 5 ஓட்டங்களையெடுத்து வெளியேறினர். இதனால் அந்த அணி 75 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

 

 

 

Related posts

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு…

மூன்றாவது இருபதுக்கு- 20 போட்டி இன்று

ஐ.பி.எல் போட்டிகளை இலங்கையில் நடத்தலாம் – மெத்யூ ஹேய்டன்