உள்நாடு

டெல்டாவை விட வீரியம் மிக்க கொவிட் வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில்

(UTV | கொழும்பு) – டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கண்டறியப்பட்ட இந்த திரிபானது, இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள திரிபுகளில், அதிக வீரியம் கொண்டது என விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்கா, ஹெங்கொங் மற்றும் பொத்ஸ்வானா முதலான நாடுகளில் இந்த புதிய திரிபுடன், 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தொடர்ந்தும் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின்சார துண்டிப்பு

கொரோனா : மரணிக்கும் முஸ்லிம்களது உடல்களை கட்டாய தகனம் செய்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் [VIDEO]

மறுஅறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும்