உள்நாடு

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV|TRINCOMALEE) – திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 2048 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹாம்பத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பரவி வரும் டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக திருகோணமலை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடாத்துவதற்கு குழுக்களை அனுப்புமாறு கிழக்கு மாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று முதல் குறித்த சோதனைகளை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த குழுக்களில் முப்படையினர், பொலிசார், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம சேவகர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று 5 மணி நேர மின்வெட்டு

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று – சபையில் ஆரம்பம்.