சூடான செய்திகள் 1

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று மற்றும் நாளை முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்கள் உள்ளடங்கும் வகையில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்று (10) மற்றும் நாளை முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 சுகாதாரப் பிரிவுகளில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வீடு, பாடசாலை, வேலைத்தளங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மதஸ்தலங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் கண்காணிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு

பொது இடங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானம்

காலநிலையில் மாற்றம்