உள்நாடு

டீசல் தட்டுப்பாட்டினால் முடங்கும் இணையத்தள சேவைகள்

(UTV | கொழும்பு) – தொடர்ச்சியாக பல மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையில், தொலைபேசி சமிஞ்சைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில் சமிஞ்சைக் கோபுரங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்காக மின்பிறப்பிக்கிகளை பயன்படுத்துவதற்கு டீசல் இன்மையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, தொலைபேசி சமிஞ்சைக் கோபுரங்களின் செயற்பாடு தடைப்படுவதுடன், குறித்த வலயங்களில் இணையத்தள சேவைகளை பெற்றுக்கொள்வதில் இடையூறு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, அனைத்து தொலைபேசி சமிஞ்சைக் கோபுரங்களுக்கும் டீசலை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக விசேட மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

என்.ஜி. வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

ரத்துபஸ்வல வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு

பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor