உள்நாடு

டீசல் தட்டுப்பாடு, பேரூந்து சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – டீசல் பற்றாக்குறையால் நாடளாவிய ரீதியில் பேரூந்து சேவைகளை 10 வீதத்தால் குறைக்க வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் இல்லாத பட்சத்தில் பேருந்துகள் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் வழமையாக இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை இயக்குவதற்கு தேவையான டீசல் இருப்புக்கள் போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இம்முறை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது – அனுர

editor

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54000 பொலிஸார் பணியில்

editor

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சில குழுவினர் வீடுகளுக்கு