விளையாட்டு

டி20 போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி

(UTV|IDIA)-இலங்கை அணிக்கு எதிராக கட்டாக்கில் நடந்த முதல் 20 ஓவர் ஆட்டத்தில் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டி வரலாற்றில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

2006-ல் இந்தப்போட்டியில் அறிமுகமாகிய இந்தியா இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 2012-ம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக கோப்பையில் 90 ரன் வித்தியாசத்தில் வென்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித்சர்மா தலைமையிலான அணி அதை முறியடித்து தற்போது சிறந்த நிலையை பெற்று இருக்கிறது.

இதேபோல இலங்கை அணி சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகலே மைதானத்தில் 85 ரன்னில் தோற்றதே மோசமான நிலையாக இருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

தேசிய கடற்கரை கபடி போட்டியில் ஊவா, வடமத்திய அணிகள் வெற்றி

241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா…