வகைப்படுத்தப்படாத

டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான ரூ.1700 கோடி ராணுவ உதவி நிறுத்தம்

(UTV|AMERICA)-தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவற்காக அமெரிக்காவை ஏமாற்றி விட்டது என்றும் அதற்காக கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.2 லட்சம் கோடி கொடுத் துள்ளது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் பகி ரங்கமாக குற்றம் சாட்டினார்.

புத்தாண்டு தினத்தன்று டுவிட்டரில் இக்கருத்தை அவர் பதிவு செய்தார்.

இதற்கு பாகிஸ்தான் உடனடியாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவ அமைச்சகம் டுவிட்டரில் பதில் அறிக்கை வெளியிட்டது. அதில், “தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் சுதந்தரம் அளித்தது.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பை அழிக்க கடந்த 16 ஆண்டுகளாக நிலம், வான் பகுதி, ராணுவ தளங்கள் மற்றும் உள்நாட்டு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறோம்.

அதையும் மீறி தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்து பாகிஸ்தான் மக்களை கொன்று குவித்தனர் என தெரிவிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விமுறையை புளோரிடாவில் மாராலோகோவில் கழித்து விட்டு அதிபர் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு இன்று திரும்பினார்.

அதை தொடர்ந்து டிரம்பை சந்தித்த நிருபர்கள், பாகிஸ்தான் மீது எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்கா வழங்க இருந்த ரூ.1700 கோடி (225 மில்லியன் டாலர்) நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதற்கிடையே பாகிஸ்தான் மீதான டிரம்பின் இத்தகைய நடவடிக்கையை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வரவேற்றுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து

நுவரெலியாவில் வீசிய பலத்த காற்றால் 21 வீடுகள் சேதம்

විදුලිය සැපයීම යතා තත්වයට