வகைப்படுத்தப்படாத

டிக்கோயா வீதியில் ஒருவாரமாக உடைப்பெடுத்த நிர் குழாய் பொது மக்கள் விசனம்

(UDHAYAM, COLOMBO) – டிக்கோயா தொழிற்சாலைக்கருகில் நீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒருவார காலமாக நீர் வீண்விரையாமாவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

நீர் கசிவதனால் வீதியில் நடந்து செல்லமுடியாதுள்ளதாகவும்  ஹட்டன் பொகவந்தலா பிரதான வீதியும் சேதமாவதாக தெரிவிக்கின்றனர்

ஹட்டன் டிக்கோயாவிற்குட்பட்ட பிரதேச வாழ் மக்களுக்கு குடி நீர் வங்குவதற்காக என்பீல்ட் ஆற்றை மறைத்து தரவலை பிரதேசத்திலிருந்து நீர்வடிகால் அமைப்பு சபையினால் நீர்குழாயினூடாக நீர்வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

பிரதேச மக்கள் நீர் பற்றாக்குறையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறு நீர் விரையமாவது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்  மு.இராமச்சந்திரன்

Related posts

චීනයෙන් දුම්වැටි ආනයනය නතර කරන බවට සහතිකයක්

வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

முடியுமானால் தேர்தலை நடாத்திக்காட்டவும் – மகிந்த