உள்நாடு

டயனா மோதல் விவகாரம் தொடர்பில் இன்று கூடும் விசாரணைக் குழு!

(UTV | கொழும்பு) –

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று கூடவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் இன்று இந்தக் குழு முன்னிலையில் அழைக்கப்பட உள்ளனர். இந்தக் குழுவுக்கு இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் தலதா அத்துகோரள ஆகியோர் ஆதரவு வழங்கவுள்ளனர். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இந்தக் குழுவின் தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உதயங்க வீரதுங்க 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

18 – 19 வயதினருக்கு பைஸர் தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு