உள்நாடு

ஞானசார தேரருக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) –பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று (14) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில், கருத்துகளைத் தெரிவித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமையை அடுத்தே அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, தனது தரப்பைச் சேர்ந்தவர் ​வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என மேலதிக நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்தார். அதனையடுத்தே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஏப்ரல் 21 – பிள்ளையான் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது சாரதி கைது

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு