விளையாட்டு

ஜாப்ரா ஆர்ச்சர் ஜூலை வரை விளையாட வாய்ப்பில்லை

(UTV |  இங்கிலாந்து) – இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் முழங்கை காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர். இவர் தென்ஆப்பிரிக்காவில் விளையாடும்போது வலது முழங்கை காயத்தால் அவதிப்பட்டார். அதன்பின் தொடர்ந்து அந்த காயம் அவருக்கு தொந்தரவை கொடுத்து வந்தது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடும்போது, கையில் புதைந்திருந்த கண்ணாடி துண்டை அறுவை சிகிச்சை மூலம் எடுப்பதற்கான தொடரில் இருந்து வெளியேறினார். ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் அவர் முழங்கையில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். கடந்த 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, சசக்ஸ் அணிகள் இணைந்து ஆர்ச்சர் காயத்தில் இருந்து மீள்வதற்கான பணியை தொடரும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. மேலும், 4 வாரங்கள் கழித்து அவரது காயம் குறித்து ஆராய்ந்து, அவர் எப்போது விளையாடுவதற்கு தயாராகுவார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதனால் ஜூன், ஜூலை வரை ஜாப்ரா ஆர்ச்சர் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

   

Related posts

அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சௌதி

சன்ரைஸஸ் அணி வீழ்ந்தது

இலங்கை கிரிக்கட் முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது