வளைகுடா

ஜமால் கஷோக்கியின் கொலையுடன் சவூதி இளவரசர் தொடர்புபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது

(UTV|SAUDI)-சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர், ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளமைஉறுதியாகியுள்ளதாக அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.

சீ.ஐ.ஏ. பிரதானி ஜீனா ஹெஸ்பெல் இனது கருத்துக்களுக்கு பின்னர் குறித்த கொலை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே, சவூதி அரசுக்குரிய முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் கொடூரமான நபர் என்றும் செனட் தெரிவித்துள்ளது.

ஜமால் கஷோக்கியின் கொலை போன்ற கொடூரமான நடவடிக்கைகளை தமது அரச ஏற்காது என அமெரிக்கா, சவூதி அராபியாவுக்கு தெரிவித்திருந்ததாகவும் அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

மீண்டும் பாராளுமன்றத்தில் சந்திரிக்கா?: அதிர்ச்சியில் ராஜபக்ஸ அணி

சவுதி மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

பாரிய பிழையொன்றின் விளைவாகவே ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளார்