வளைகுடா

ஜமால் கசோகி கொலை-ஐவருக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

(UTV|SAUDI)-ஊடகவியலாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 5 சவுதி அரேபிய அதிகாரிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்குமாறு அந்நாட்டு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

தலைநகர் ரியாத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் பின்னர், கசோகிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள குறித்த 5 அதிகாரிகளும் உத்தரவிட்டதாக சட்டமா அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கசோகியின் உடற்பாகங்கள் முகவர் ஒரிவரிடம் கையளிக்கப்பட்டு தூதரகத்திலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்டதாக சவுதி அரேபிய சட்டமா அதிபர் திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி மன்னர் வாழ்த்து

சவுதி பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி

சவூதியில் துல்ஹஜ் மாத பிறை தென்பட்டது – ஞாயிறு பெருநாள்