வகைப்படுத்தப்படாத

ஜப்பான் மன்னனின் 85-வது பிறந்தநாளை கொண்டாடும் ஜப்பான் மக்கள்

(UTV|JAPAN)-ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான அகிஹிட்டோ  வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.

பதவி விலகுவதற்கான விதிகளும் சட்டத்தில் இல்லை என்பதால், மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மன்னர் பதவி விலகுவதற்கான நடைமுறைகள் தொடங்கியது.
இந்நிலையில், மன்னர் அகிஹிட்டோ 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பதவி விலக உள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்.
மன்னர் அகிஹிட்டோ பதவி விலகிய மறுநாள் அவரது மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ (வயது 58) மன்னராக முடிசூட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மன்னர் அகிஹிட்டோ அமர்ந்த ‘கிறிசாந்தமம்’ அரியணையும் நருஹிட்டோவிடம் ஒப்படைக்கப்படும்.
இந்நிலையில், கடைசியாக அரியணையில் தனது 85-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் மன்னர் அகிஹிட்டோவை இம்பரீயல் அரண்மனையில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.
மன்னரின் பிறந்தநாளை நாடு முழுவதும் ஆடல்,பாடல், கலை நிகழ்ச்சிகளுடன் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மன்னர் அகிஹிட்டோவின் பிறந்தநாளையொட்டி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related posts

spill gates of Upper Kotmale Reservoir opened

Premier calls for Ranjan’s explanation

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இரண்டாவது முறையாகவும் நிலநடுக்கம்