சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஹிரோசிமா நகருக்கு விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோசிமா நகருக்கு இன்று (15) விஜயம் செய்தார்.

ஹிரோசிமா நகருக்கு சென்ற ஜனாதிபதி அந்நகரின் நகர பிதாவினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹிரோசிமா நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அங்குள்ள நூதனசாலையையும் பார்வையிட்டார்.

ஹிரோசிமா நகரின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதலாவது அணுகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாக்குதல் காரணமாக இந்த நகரம் 90 வீதம் அழிவுக்குட்பட்டதுடன், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரேநேரத்தில் உயிரிழந்தனர். அவ்வருட நிறைவில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,40,000 ஆக அதிகரித்தது.

இந்த அனர்த்தம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு சில நிமிடங்கள் உணர்வுபூர்வமாக இருந்தார்.

அப்பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் கட்டிடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவத்தில் 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் இரு கைக்குழந்தைகள் கழுத்தறுத்து கொலை

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள்களை கண்டறியும் தெரிவுக்குழுவுக்கு 8 பேர் நியமனம்