அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டம்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டம் குறித்து கிடைத்துள்ள தகவல் குறித்தே விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதானநீதவான் திலிக கமகே முன்னிலையில் இது குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கண்டியில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், சந்தேகநபர்கள் எவராவது காணப்பட்டால் அவர்களை கைதுசெய்யுமாறும் நீதவான உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்திய பணியாளர்கள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 153 பேர் வீடுகளுக்கு

ஐ.நா காலநிலை மாற்றம் மாநாடு – ஜனாதிபதி ஸ்கொட்லாந்துக்கு