அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் அனுரவின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு அபராதம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தலா 1,500 ரூபா தண்டம் விதித்துள்ளது.

குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (26) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறி  அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை பொலிஸ் பிரிவில் ஒட்டும் போதே இந்த 2 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து சந்தேகநபர்களுக்கு நீதவான் அபராதம் விதித்தார்.

Related posts

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்

நித்யா மேனனுக்கு கல்யாணமா?

இதுவரை 7000 பேர் கைது