அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணிலை சந்தித்த அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா உள்ளிட்ட குழுவினரை இன்று (25) சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா, பொதுச் செயலாளர் டொன் அன்டன் ஜெயக்கொடி, கொழும்பு உதவி ஆயர் மற்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் பாதிரியார்களைச் சந்தித்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்கள், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள், சுற்றுச்சூழல் மற்றும் மத விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

அத்தோடு  நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு சவால்களுக்கு ஈடுகொடுப்தற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் பாதிரியார்களுக்கு விளக்கமளித்தார்

Related posts

இந்தோனேசியாவில் நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்

“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வௌிநாடு செல்லத் தடை” ……!!

சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு