உள்நாடு

‘ஜனாதிபதி பதவி விலகல்’ : ஜனாதிபதியின் ஊடகத் தொடர்பாளர் மறுப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டின் பொருளாதார நெருக்கடியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசுபொருளாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பதிவாகத் தொடங்கியிருந்தன.

இந்நிலையில் இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், ஜனாதிபதியை எவ்வாறு நியமிக்கலாம் மற்றும் எவ்வாறு பதவியில் இருந்து நீக்கலாம் என்பது அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் எதிர்கால தீர்மானங்கள் அவரது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக தெரிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் நாம் அலசியதில்; கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் இறுதி நாட்களில் சமூக வலைதளங்களில் இவ்வாறான பதிவொன்று பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த பதிவிற்கான முதல் சில கருத்துக்கள் இவ்வாறு பதியப்பட்டிருந்தது.

மேலே கூறப்பட்ட முகநூல் பதிவு ‘ஜனாதிபதி பதவி விலகத் தயார்’ என  இன்று(21) மீண்டும் சூழ்நிலைக்கு ஏற்ப சமூக வலைதளங்களில் மீண்டும் உலாவந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

தண்ணீர் போத்தல் விலைகளும் அதிகரிப்பு

யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இந்தியா சென்றார் ஜனாதிபதி : ஜனாதிபதி செயலாளாரக சந்தானி -அமைச்சர்கள் நியமனம்