சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

(UTV|COLOMBO)-ஈரானுக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 1.45 அளவில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஈரான் ஜானாதிபதி ஹசன் ரௌஹானியின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாபதி மைத்திரிபால சிறிசேன, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை சந்தித்து கலந்துரையாடினார்.

போதைப்பொருள் ஒழிப்பு, கலாசாராம், கல்வி, சினிமா மற்றும் சுகாதாரதுறை என்பன குறித்து 5 உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் – இலங்கைக்கு இடையில் பொருளாதார மற்றும் சந்தை வாய்ப்புகளை மேலும் விஸ்தரித்தல் மற்றும் இலங்கையில் ஈரான் அரசினால் மேற்கொள்ளப்படக்கூடிய முதலீடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அந்நாட்டு ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இரு நாட்டு மக்களினதும் விழுமியங்களில் சமநிலை காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடன் நடைபெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது புரிந்து கொண்டதாக ஈரான் ஆன்மீக தலைவர் அயத்துல்லா அலி கமேனி குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

பிரதான புகையிரத பாதைகளின் போக்குவரத்து வழமைக்கு

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள்- ரயில்கள் சேவையில்