உள்நாடு

ஜனாதிபதி தேர்ந்தெடுத்தலில் போராட்டக்காரர்களின் நிபந்தனை

(UTV | கொழும்பு) – காலிமுகத்திடல் மைதானத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கோட்டாகோஹோம் என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 100 நாட்களை நேற்றைய தினம் (17) பூர்த்தி செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பொதுப் போராட்டம் மற்றும் வீதிப் போராட்டங்களில் உயிரிழந்த போராளிகளை நினைவு கூறும் வகையில் காலிமுகத்திடலில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை, அடுத்தடுத்து  ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பில் காலிமுகத்திடலில் செயற்பாட்டாளர்கள் நேற்று (17) அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளை வலியுறுத்துவது இந்த பேச்சுவார்த்தைத் தொடரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகளுடன் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், இன்று (18) மேலும் பல கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக போராட்டக்காரர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி – சந்தேக நபர் கைது.

தனிமைப்படுத்தல் மற்றும் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்