சூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றுடன் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று(30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினம் இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், குறித்த கால வரையறையை நீட்டிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இன்று இடம்பெறும் ஆணைக்குழு சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முன்னாள் அமைச்சர் ரிஷாத் தலைமையில் சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

UTV இன் சிறுவர் தினக் கொண்டாட்டம்