அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – இறுதி அறிக்கை பிரதமர் ஹரிணியிடம் கையளிப்பு

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு தொடர்பான இறுதி அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவினர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோரினால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பு இறுதி அறிக்கை இன்று வியாழக்கிழமை (16) பிரதமரிடம் கையளிப்பட்டது.

எதிர்காலத் தேர்தல் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான முக்கிய பரிந்துரைகள் மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு (போனஸ்) இல்லை

editor

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் – பிரதமர்

ஓய்வூதியம் பெறும் விவசாயிகள், மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி