அரசியல்

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக்கோரி மற்றுமொரு அடிப்படை உரிமை மனு.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கும் வரை அரசியலமைப்பு மீறல் என தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்றிசி உனவட்டுனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக, ஒரு வருடத்திற்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 70ஆவது சரத்து திருத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த சட்டத்திருத்தத்தை பொதுவாக்கெடுப்புக்கு அனுப்ப வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்ப்பளித்த போதிலும், அந்தத் திருத்தம் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி, அதனை நிறைவேற்றும் வரை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய முதல் சுயேட்சைக் குழு

editor

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ?

editor

IMF குறித்து அனுரவின் நிலைப்பாடு

editor