தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவதாக அந்தக் கட்சித் தலைவர் உறுதியளித்தார்.

