சூடான செய்திகள் 1

ஜனாதிபதி திரைப்பட விருது விழா…

(UTVNEWS | COLOMBO) – 72 வருட இலங்கை திரைப்படத்துறை வரலாற்றில் 19ஆவது ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (26) மாலை தாமரைத் தடாக கலையரங்கில் கோலாகலமாக இடம்பெற்றது.

2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை திரையிடப்பட்ட 79 திரைப்படங்களில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய 27 கலைஞர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், முன்னோடி விருதுகள் மற்றும் “சுவர்ணசிங்ஹ” விருது, “விஸ்வ கீர்த்தி” விருதுகள் 11 பேருக்கு ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது வாழ்நாள் விருதாக வழங்கப்படும் “சுவர்ணசிங்ஹ” விருது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் பிரபல திரைப்பட நடிகர் ரவீந்திர ரந்தெனிய, முன்னணி திரைப்பட நடிகை நீதா பெர்ணான்டோ, பிரபல திரைப்பட இயக்குனர் சுகதபால செனரத் யாப்பா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேர்னார்ட் வசந்த உள்ளிட்ட பெருமளவான கலைஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

Related posts

சுதந்திரம் அற்ற யுகத்திற்கு மீளவும் நாட்டை கொண்டுச் செல்ல அனுமதிக்க முடியாது – சஜித் பிரேமதாச [VIDEO]

02 கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

குப்பை கொள்கலன்களை இடமாற்ற விதிக்கப்பட்ட தடை நீடிப்பு