சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் ‘சத்விரு அபிமன்’ இராணுவ நலன்புரி விழா

(UTV|COLOMBO)-இராணுவத்தினருக்கான நலன்புரி செயற்திட்டங்களை கையளிக்கும் ‘சத்விரு அபிமன்’ இராணுவ நலன்புரி விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று(18) தாமரைத்தடாக கலையரங்கில் நடைபெற்றது.

முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இராணுவத்தினருக்காக முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 800 வீடுகளை பூரணமாக்கி கொடுத்தல், இராணுவத்தினரின் பிள்ளைகளுக்காக 279 ‘விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில்கள், குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத இராணுவத்தினருக்கு 84 பகுதியளவு காணித் துண்டுகளை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன உள்ளிட்ட முப்படை தளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் (video)

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது இணைய சேவை கட்டுப்பாடு விதித்துள்ளது