உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 103 முறைப்பாடுகள்

(UTV|கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 103 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆணைக்குழுவில் பெற்றுக்கொள்ளப்பட் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் D.K.P. தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் குழுவால் முதலாவதாக 4 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா ஆகியோரால் பொய்யான சாட்சிகள் வழங்கப்பட்டு கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக சதி முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சாட்சிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணைக்குழுவால் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்பிரகாரம், அட்மிரல் D.K.P. தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் இருவர் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினர்.

எவ்வாறாயினும், முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் வசந்த கரன்னாகொட நேற்று ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமானதுடன் இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.

 

Related posts

மக்கள் விரும்பினால் தொடர்ந்தும் ராஜபக்சவே நாட்டை ஆட்சி செய்வார்

பணிப்பாளராக சாணக்கியன் , அமைச்சராக சுமந்திரன் ; கம்மன்பில காட்டம்!

பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து – அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் – வீடியோ

editor