உள்நாடு

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தீபாவளி கொண்டாட்டம்!

(UTV | கொழும்பு) –

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கொண்டாட்டம் இந்து சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு மிகவும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு இந்து சமய கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிகழ்வில் கலந்து கொண்ட இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜா மற்றும் விசேட விருந்தினர்கள்,ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட ஜனாதிபதி அலுவலக உயர் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

       

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஷாபியை நாசமாக்கிய சன்ன ஜயசுமனவை SJBக்குள் எடுக்க ரிஷாட், மனோ கடும் எதிர்ப்பு!

பரந்தன் – பூநகரி பாதை மூடப்படவுள்ளது

Just Now : வசந்த முதலிகே கைது : களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றம்