அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர – சட்டமா அதிபர் இடையே அவசர சந்திப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் முடிவு குறித்த காரணங்களை அறிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை இன்று (6) பிற்பகல் அழைத்துள்ளார்.

அதன்படி, சட்டமா அதிபர் பிற்பகல் 1.45 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்ததோடு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் இதன்போது இணைந்துக்கொண்டார்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு, சட்டமா அதிபரும் நீதி அமைச்சரும் மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறினர்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில், சாட்சியங்களை மறைத்தல் மற்றும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று சட்டமா அதிபர் ஒரு கடிதம் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சகல சமூகங்களும் தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த அனைவரும் முன் வரவேண்டும் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ரிஷாட் எம்.பி

editor

ஒருவர் அடித்து கொலை- 16 வயதுடைய 03 சிறுவர்கள் கைது!

முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று